Ad Code

Responsive Advertisement

தூங்குவதற்கு சிறந்த நேரம் எது

தூங்குவதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. முன் தூங்கி முன் எழுவது, பின் தூங்கி முன் எழுவது,முன் தூங்கி பின் எழுவது என தூங்கும் தூங்கும் நேரம் வித விதமாக இருந்தாலும் தூங்குவதற்கு எது சரியான நேரம் என்பது முக்கியம்

 தூங்குவதற்கு சிறந்த நேரம் ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டும், நாம் தூங்குவதற்கு கடிகாரத்தில் நேரம் பார்க்கிறோம். ஆனால் நமது உடலின் உள்ளே ஒரு அற்புதமான உயிரியல் கடிகாரம் துல்லியமாக துடித்துக் கொண்டிருக்கிறது. நாம் தூங்க வேண்டிய நேரம் உட்பட நம் உடலில் உள்ள பல்வேறு உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் இந்த உயிரியல் கடிகாரத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. 

 இரவு 11 மணி முதல் காலை மூன்று மணி வரை நமது இரத்த ஓட்டமானது கல்லீரல் பகுதியை மையம் கொண்டிருக்கும். நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும், தீங்கு விளைவிப்பவையும் இருந்தால்,அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். இந்த நான்கு மணிநேரங்களில் கல்லீரல் அதிக இரத்தத்தால் நிரப்பப்பட்டு விரிவடைகிறது. அப்போது நாள் முழுவதும் திரட்டப்பட்ட உடல் நச்சுப் பெருட்களை உடைத்து, கரைத்து சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு நம் உடல் ஓய்வு நிலையில் இருக்கவேண்டும். நீங்கள் இரவு 11 மணிக்கு தூங்கினால் உடலில் உள்ள நச்சுப் பொருளை நீக்கும் பணியானது நான்கு மணிநேரம் நடைபெறும். நீங்கள் இரவு 12 மணிக்கு தூங்கினால் அப்பணியானது மூன்று மணிநேரம் நடைபெறும்.

  நீங்கள் அதிகாலை 1 மணிக்கு தூங்கினால் அப்பணியானது பணியானது இரண்டு மணிநேரம் மட்டுமே நடைபெறும். 2 மணிக்கு தூங்கினால் அப்பணியானது ஒரு மணிநேரமே நடைபெறும். நீங்கள் காலை 3 மணிக்கு மேல் தூங்கினால் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற கல்லீரலுக்கு நேரம் கிடைக்காது. எனவே அது அங்கே தங்கிவிடும். நச்சுப் பொருட்கள் உடலிலே தங்கி விட்டால் என்னவாகும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆகவே நாம் 2 மணி முதல் 8 மணி வரை 6 மணி நேரம் தூங்கினாலும் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் உடலிலே தங்கி சில உடல் சுகவீனங்களை உருவாக்குவதோடு உடலையும் கெடுத்துவிடும். காலை 3 மணியிலிருந்து 5 மணி வரை இரத்த ஓட்டமானது நமது நுரையீரலை மையம் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நாம் உடற்பயிற்சி செய்து சுத்தமான காற்றை சுவாசித்தால் நுரையீரல் தன் பணியை செய்வதற்கு வசதியாக இருக்கும். 


6 மணி நேர தூக்கம் பற்றி யோசித்திருப்போம். ஆனால் எந்த ஆறு மணிநேரம் என்பதை நாம் சரியாக தீர்மானிக்க வேண்டும். வெளிப்புற கடிகாரத்தை நாம் சிறிது மாற்றியமைக்கலாம்.ஆனால் உயிரியல் கடிகாரத்தை நாம் மாற்றியமைக்க முடியாது. எதை மாற்றியமைப்பது என்பதை நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்
Reactions

கருத்துரையிடுக

0 கருத்துகள்